உடற்குறையுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சி


அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சி இவ்வாண்டு உடற்குறையுள்ளவர்களுக்கு ஊக்கமளித்து அவர்கள் சமுதாயத்திற்குப் பயன்மிக்க வகையில் பங்களிக்க வைப்பதில் கவனம் செலுத்தவிருக்கிறது.

அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும் அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சிமூலம் திரட்டப்படும் நிதி 67 அமைப்புகளுக்கு வழங்கப்படும்.


'Be the change we want to see' என்பது இந்த ஆண்டின் கருப்பொருள்.


உள்ளூர்ப் பிரபலங்கள் மட்டுமின்றி வட்டார நாடுகளின் நட்சத்திரங்களும் அதில் பங்குபெறவுள்ளனர்.


அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சியின் ஓர் அங்கம் மனநலப் பிரச்சினையைக் கையாள்வதில் கவனம் செலுத்தவிருக்கிறது.


அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சியில் முதன்முறையாக 'Relay Majulah' எனும் தொடர் ஓட்டமும் நடைபெறவுள்ளது.


அந்த முயற்சி 8 நாள்களுக்கு நீடிக்கும்.


சுமார் 200 பங்கேற்பாளர்கள் கூட்டாக 2000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நிதி திரட்டுவர்.

அதில் நாடாளுமன்ற நாயகரான டான் சுவான் ஜின்னும் (Tan Chuan Jin) கலந்துகொள்வார்.

அந்த அங்கம் அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சியின்போது நேரடியாக ஒளிபரப்படும்.

அந்த 2 மணிநேர நிகழ்ச்சியை மீடியாகார்ப் ஒளிவழி ஐந்திலும் Toggle பக்கத்திலும் பொதுமக்கள் பார்க்கலாம்.


26ஆவது முறையாக அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Credit: https://seithi.mediacorp.sg/mobilet/singapore/star-charity/4351574.html